இந்தியா-இலங்கை இடையே கடல் பகுதியில் பதற்றம்: 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
இந்தியா-இலங்கை இடையே கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இது தொடர்பாக சுமுக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை அக்கரைப்பேட்டை மற்றும் காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் நேற்றுமுன்தினம் சிறை பிடிக்கப்பட்டனர்.
இதனால் இந்தியா-இலங்கை கடல் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்களது படகுகள் அனைத்தும் நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். அப்போதுதான் தாங்கள் நிம்மதியாக தங்களது தொழிலை செய்ய முடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறியதாவது:-
இலங்கை மீனவர்கள் உயிரிழந்தனர்
இலங்கையை சோ்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது மர்மமான முறையில் இறந்தனர். இதற்கு தமிழக மீனவர்கள்தான் காரணம் என இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டி, போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த பதற்றமான சூழ்நிலையில் நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பதற்றம் நிலவுகிறது
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடல் எல்லையில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படக்கூடிய பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வலியுறுத்தியும், நாகை மாவட்ட மீனவர்கள் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
அதைக்கேட்ட அதிகாரிகள், கடல் எல்லையில் பதற்றம் தணியும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இதன் காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1000 விசைப்படகுகள், 5 ஆயிரம் பைபர் படகுகள் கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோம் என்றனர்.

Related Tags :
Next Story