‘திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்’ சமூக நல அமைப்புகள் கோரிக்கை
வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் இடையே ஒரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை முதல் கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயங்கி வந்தது. அதற்கு பிறகு வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, சர் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, டோல்கேட், காலடிபேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர் மற்றும் விம்கோநகர் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் திருவொற்றியூர் தேடி ரெயில் நிலையம் பணிகள் நிறைவடையாததால் அந்த ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்திற்கு இறங்க வேண்டியவர்கள் காலடிபேட்டை அல்லது திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி மாற்று போக்குவரத்தில் செல்கின்றனர்.
எனவே ஒரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடக்கும் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தை வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நலன் கருதி விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் நகரும் படிக்கட்டுகளும் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகளும், உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் திறக்க திட்டம்
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் அமைப்பதற்கு போதுமான இடம் கையகப்படுத்துவது மற்றும் வடிவமைப்பில் மாற்றம் செய்வது போன்ற காரணங்களால் பிற ரெயில் நிலையங்கள் போன்று கட்டுமானப்பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்சார விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தொடர்ந்து ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல்கள் சோதனை செய்யப்பட்டன. அவை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. குறுகலான சாலையில் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதால் 5 மாடிகளை கொண்ட ரெயில் நிலையத்திற்கு நகரும் படிகட்டுகள் அமைப்பதற்கான இடவசதி இல்லை. இதனால் மற்ற ரெயில் நிலையங்களை விட கூடுதலாக இந்த ரெயில் நிலையம் முன்பு சாலையின் இரண்டு பகுதிகளிலும் தலா 3 லிப்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர் பவனி
திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில் தேர் திருவிழாவின் போது தேரடி வீதியில் தேர் பவனி வரும் போது உயர்த்தப்பட்ட திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் பாதைகள் குறுக்கீடு இருக்க கூடாது என்பதால் மற்ற ரெயில் நிலையங்களை விட இந்த ரெயில் நிலையம் 70 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது. தேர் 58 அடி உயரத்தில் இருப்பதால் தேர் பவனி வரும் போது மெட்ரோ ரெயில் பாதையால் எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது பணிகள் நிறைவடைந்து உள்ளதால் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய உடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story