சென்னை வானொலி நிலையங்களை மூடுவதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னை வானொலி நிலையங்களை ஒன்றன்பின் ஒன்றாக மூடுவதா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவையை நிறுத்த பிரசார்பாரதி அமைப்பு முடிவு செய்திருப்பதாகவும், எந்த நேரமும் அதன் சேவை நிறுத்தப்படக்கூடும் என்று தெரியவந்துள்ளது. சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் அண்மையில் மூடப்பட்ட நிலையில், சென்னை வானொலியின் அடையாளமான முதன்மை அலைவரிசையையும் மூட முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அலை, சிற்றலையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப ‘டிரான்ஸ்மிட்டர்'கள் தேவை.
அவற்றை பராமரிப்பது செலவு பிடிக்கும் விஷயமாகும். அதனால் சென்னை வானொலி மற்றும் நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களுக்கு உள்ள ‘டிரான்ஸ்மிட்டர்'களை அகற்றுவதன் மூலம் செலவை குறைப்பதுடன், அவை அமைக்கப்பட்டுள்ள நிலங்களை தனியார்மயமாக்கி வருவாய் ஈட்டும் நோக்குடன் தான் மத்திய அலை, சிற்றலை வானொலிகளை மூட பிரசார்பாரதி திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இது மிகவும் தவறான முடிவு மட்டுமின்றி, தவிர்க்கப்படவேண்டிய முடிவும் ஆகும்.
கைவிடவேண்டும்
மத்திய அலை, சிற்றலை வானொலிகளை மூடுவதால் தரமான நிகழ்ச்சிகளை கிராமப்பகுதிகளிலும், தொலைதூரங்களிலும் உள்ள மக்கள் கேட்க முடியாத நிலை ஏற்படும். பண்பலைக்காக தனி நிகழ்ச்சிகள் இருக்காது என்பதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், ‘டிரான்ஸ்மிட்டர்'கள் கைவிடப்படுவதால் ஏராளமான பொறியாளர்களும் வேலை இழப்பார்கள். இவற்றை கடந்து வான் ஒலிபரப்பில் மன்னராக திகழும் அகில இந்திய வானொலி, வெறும் பண்பலைகளை நடத்தும் சிப்பாயாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை வரக்கூடாது.
சீனா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் உள்ள நாடுகள் சிற்றலை, மத்திய அலையில் தங்களின் ஒலிபரப்பு சேவையை வலுப்படுத்தி வருகின்றன. உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும் இந்தியாவிடம் கடன் வாங்கும் இலங்கை கடந்த ஜனவரி 20-ந்தேதி முதல் மத்திய அலையில் கொழும்பு சர்வதேச வானொலி என்ற பெயரில் பிரமாண்ட பன்னாட்டு ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இந்தியா வானொலி சேவைகளை குறைப்பது நகைப்புக்கும், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகும்.
எனவே சென்னை ‘ஏ’ அலைவரிசையை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எந்த மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார்பாரதி கைவிடவேண்டும். மாறாக நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story