சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற திட்டம் வகுக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற 2 வாரத்துக்குள் திட்டத்தை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து ஐகோர்ட்டில் மாறுபட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், இந்த மரங்களை அகற்ற அறிவியல்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு 2-க்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வேரோடு அகற்ற வேண்டும்
அப்போது அரசு தரப்பில், சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு திட்டமும் வகுக்கப்பட உள்ளது. அறிவியல்ரீதியாக அகற்றுவதற்காக நிபுணர் குழு மற்றும் நீரி அமைப்பின் அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளது. அவை கிடைத்ததும் இந்த மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்கப்படும். இதற்காக 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கிவிடுகின்றன என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல், வேரோடு அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
2 வாரங்களில்...
மேலும், 5 ஆண்டுகளாக இந்த மரங்களை முழுமையாக அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழுக்கள் மேல் குழுக்கள் அமைத்து அறிக்கை கேட்பதால் எந்தப் பலனும் இல்லை. சமநிலையற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 2 வாரங்களில் திட்டம் வகுத்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் கண்காணிப்பில் அமல்படுத்த வேண்டும். இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியையோ அல்லது அரசு நிதி ஒதுக்கியோ பயன்படுத்தலாம் என்று கூறி, விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Related Tags :
Next Story