அண்ணா நினைவு தினம்: பேரறிஞர் காட்டிய வழியில் பயணிப்போம்! - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அண்ணா நினைவு தினம்: பேரறிஞர் காட்டிய வழியில் பயணிப்போம்! - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Feb 2022 11:32 AM IST (Updated: 3 Feb 2022 1:59 PM IST)
t-max-icont-min-icon

பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினைத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.


மேலும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது.

பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்!' என்று தெரிவித்துள்ளார்.

Next Story