தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி: தயவு செய்து வளருங்கள்...! ராகுல் காந்திக்கு குஷ்பு பதிலடி!


தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி: தயவு செய்து வளருங்கள்...! ராகுல் காந்திக்கு குஷ்பு பதிலடி!
x
தினத்தந்தி 3 Feb 2022 12:16 PM IST (Updated: 3 Feb 2022 12:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு போதும் ஆட்சி அமைக்காது என கூறிய ராகுல் காந்திக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை,

மக்களவையில் ஜனாதிபதி  உரை மீதான விவாதத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசும் பொழுது, “இந்தியா என்பது மாநிலங்களுடன் இணைந்த ஒன்றியம் ஆகும். இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது. நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது. 

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

நடிகையும் பா.ஜ.க தலைவருமான குஷ்பு சுந்தர் ராகுல் காந்தியின் பேச்சிற்கு தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்த மனிதன் எப்போது கற்றுக்கொள்வார்? ப்ளீஸ் உங்கள் உண்மைகளை சரியாகப் பாருங்கள் ராகுல் காந்தி ஜி. புதுச்சேரியில் பாஜக அரசு உள்ளது. அதாவது தமிழர்கள் எங்களை நம்பியுள்ளனர். தயவு செய்து வளருங்கள், நீங்கள் பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தடுமாறுவதைப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது" என தெரிவித்துள்ளார்.





Next Story