தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா? - ஜெயக்குமார் கேள்வி
தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் பேசுகையில், பாஜக வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை ஆள முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது’ என்றார்.
மக்களவையில் உரையாற்றிய பின்னர் வெளியே வந்த ராகுல் காந்தியிடம், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பலமுறை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி 'நானும் ஒரு தமிழன் தான்' என்றார்.
இந்நிலையில், நானும் ஒரு தமிழன் தான் என ராகுல்காந்தி கூறியது குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமாரிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா..? நான் தமிழன் என்று கூற ராகுல்காந்திக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒட்டுமொத்தமாக திமுக உடன் சேர்ந்து தமிழினத்தையே அழித்தவர்கள். வரலாறு அவர்களை மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆண்மா மன்னிக்காது. தமிழினத்தையே கொன்றுவிட்டு இன்று தமிழன் தமிழன் என்று பேசினால் தமிழர்கள் நம்பமாட்டார்கள்’ என்றார்.
தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா..? - ஜெயக்குமார் கேள்வி#RahulGandhi#Jayakumarpic.twitter.com/XcjLog1Eyj
— Thanthi TV (@ThanthiTV) February 3, 2022
Related Tags :
Next Story