அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதிக் கூட்டமைப்பு என நாடகமா..? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Feb 2022 4:48 PM IST (Updated: 3 Feb 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

9 மாதகால திமுக அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதிக் கூட்டமைப்பு என நாடகம் ஆடுகிறாரா முதல்-அமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுவதை விடுத்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் தன்னுடைய நிர்வாக தோல்வியை மறைக்க சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் முடிந்தால் ஏதாவது செய்யும்படி வலியுறுத்துகிறேன்” என்று அதில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.




Next Story