நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர் - தமிழக அரசு அறிக்கை வெளியீடு!


நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர் - தமிழக அரசு அறிக்கை வெளியீடு!
x
தினத்தந்தி 3 Feb 2022 7:19 PM IST (Updated: 3 Feb 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

நீட் மசோதா தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து, நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு தமிழக எம்.பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கவர்னரின் முடிவுக்கு பிறகு தமிழக அரசு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி வளர்ச்சிக்கு தடை போடும் நீட் தேர்வை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்க்கிறது.

நீட் தேர்வு தமிழகத்தின் உரிமையை பறிக்கிறது.

தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நீட் தடையாக உள்ளது.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மாணவர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு ரத்து தொடர்பக சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story