"ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?" அண்ணா எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்


ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா? அண்ணா  எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 3 Feb 2022 9:40 PM IST (Updated: 3 Feb 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

சென்னை,

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட வரும் 5-ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக விவாதிக்க  பாஜக உட்பட அனைத்து சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், அண்ணாவின் 53வது நினைவுநாளில் 'ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?' என்று அன்றே காரணத்தோடு அவர் எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.    

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

Next Story