நீட் விலக்கு மசோதா: பாஜக உட்பட அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Feb 2022 9:41 PM IST (Updated: 3 Feb 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சித்தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

ஆனால், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,  நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில்  நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நீட் விலக்கு தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு சட்டமன்ற கட்சித்தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., ம.தி.மு.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமைக்கட்சி, கொ.ம.தே.க., புரட்சி பாரதம் கட்சி தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story