பணிக்கு திரும்பிய மின்துறை ஊழியர்கள்


பணிக்கு திரும்பிய மின்துறை ஊழியர்கள்
x
தினத்தந்தி 3 Feb 2022 11:41 PM IST (Updated: 3 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதையொட்டி மின்துறை ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினார்கள்.

பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதையொட்டி மின்துறை ஊழியர்கள் இன் முதல் பணிக்கு திரும்பினார்கள்.
வேலைநிறுத்தம்
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர், மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ,மின்துறை ஊழியர்கள் கடந்த 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்கட்டண வசூல், மின்தடை பழுது நீக்குதல், புதிய இணைப்பு கொடுப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. மின்தடை காரணமாக பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன.
பணிக்கு திரும்பிய ஊழியர்கள்
இந்தநிலையில் மின்துறை ஊழியர்களுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மின்துறை ஊழியர்கள், பொதுமக்களிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மின்துறை ஊழியர்கள் நேற்று  இரவு அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினார்கள். இதன் காரணமாக மின்கட்டண வசூல், பழுது பார்க்கும் பணிகள் வழக்கம்போல் நடைபெற்றன.

Next Story