சிறுக சிறுக சேமித்த பணத்தில் விமானத்தில் பறந்த மகளிர் குழுவினர் நீண்ட நாள் கனவு நனவானது
சுயஉதவிக்குழு பெண்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தில் விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தனர். இதன்மூலம் அவர்களது நீண்டநாள் கனவு நனவானது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்தில் 43 மகளிர் குழுக்கள் இயங்குகின்றன.
இந்த குழுக்கள் கூட்டமைப்பின் மூலம் வங்கிகளில் தங்கள் குடும்ப செலவுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்துவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், ஆண்டுதோறும் தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பயனுள்ள பொருட்களை வாங்கி சிறுசேமிப்பை ஊக்குவித்து வந்தனர்.
விமானத்தில் பயணம்
அவ்வாறு இந்த ஆண்டு சிறுக சிறுக சேமித்த பணத்தில் சுற்றுலா செல்ல முடிவு செய்து இதுவரை மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யாத பெண்கள் சென்னைக்கு விமானத்தில் செல்வது என்று தீர்மானித்தனர்.
அதன்படி, 3 குழுக்களை சேர்ந்த 30 வயது முதல் 60 வயது வரை உள்ள 32 பெண்கள், மகளிர் குழுக்கள் கூட்டமைப்பின் தலைவி மெர்சி தலைமையில் நேற்று கழுநீர்குளம் மற்றும் கல்லூத்தில் இருந்து வேன்கள் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர்.
சுற்றுலா தலங்களை பார்த்தனர்
அங்கு அவர்கள் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றில் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் நினைவிடம், மெரினா கடற்கரை ஆகிய இடங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலங்களை பார்வையிட்டு முடித்த பிறகு இரவில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை ரெயிலில் ஊர் திரும்பினர்.
கனவு நனவாகியது
விமான பயணம் என்பது சுயஉதவி குழுவைச்சேர்ந்த இந்த பெண்களுக்கு நீண்டநாள் கனவாகவே இருந்தது.
தற்போது சிறுசேமிப்பு மூலம் கிடைத்த பணத்தில் விமானத்தில் பறந்ததன் மூலம் அவர்களது நீண்டநாள் கனவு நனவாகி உள்ளது. விமான பயணம் தங்களுக்கு ஆனந்த அனுபவத்தை தந்ததாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

Related Tags :
Next Story