உள்ளாட்சி தேர்தலில் 100% ஓட்டுப்பதிவு இலக்கு; சென்னை மாநகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% ஓட்டுப்பதிவை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மக்கள் கூடும் பொதுஇடங்களில், ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை எடுத்து கொண்டால், 200 வார்டுகளில், 30 லட்சத்து, 23 ஆயிரத்து 803 ஆண்கள் மற்றும் 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண்கள் மற்றும் 1,576 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
அந்த வகையில், மொத்தமுள்ள 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் ஓட்டளித்து, சென்னை மாநகராட்சியின், 200 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதனையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் சேர்ந்து, பட்டியலின பெண் கவுன்சிலர் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பர். பெரும்பான்மை அடிப்படையில், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஓட்டுப்பதிவு நாளில், மாநகராட்சியில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயாளிகள் ஓட்டளிக்க வசதியாக, ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story