53-வது நினைவுதினம்: அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
அண்ணாவின் 53-வது நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இ.பரந்தாமன், கே.பி.சங்கர், எழிலன், வேலு, மகளிரணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், வி.பி.மணி, எஸ்.மதன்மோகன் உள்பட நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து தொ.மு.ச. பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் அருகேயுள்ள கருணாநிதி நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிட வளாகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, கோகுல இந்திரா, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் மற்றும் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வி.குமரேசன் உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் தலைமையில் பழனி, சுதர்சன், செல்வம், ரவி உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தோர் பலரும் அண்ணா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில்...
அண்ணா நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான மு.தம்பிதுரை எம்.பி., கட்சியின் நாடாளுமன்ற குழு துணை தலைவரும், மக்களவை குழு தலைவருமான ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story