குரூப் 2, குரூப் 2 ஏ- தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியீடு – டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ தேர்வுகளுக்கான தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ தேர்வுகளுக்கான தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா பாலச்சந்திரன் மேலும் கூறுகையில், “ குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வுகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 32 வகையான தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) திட்டமிட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story