இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்


இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
x
தினத்தந்தி 5 Feb 2022 1:42 AM IST (Updated: 5 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

உவரியில் இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது.

திசையன்விளை:

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து உவரி கடலோரப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி, மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மீன்வளத்துறை ரேஞ்சர் கருப்பையா முன்னிலையில் டாக்டர் மனோகரன், இறந்த டால்பினை பரிசோதனை செய்தார். பின்னர் கடற்கரையில் குழி தோண்டி டால்பின் புதைக்கப்பட்டது. 

Next Story