தேர்தல் விதிமீறல்; 194 புகார்கள் பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு


தேர்தல் விதிமீறல்; 194 புகார்கள் பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 3:37 AM IST (Updated: 5 Feb 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமீறல்; 194 புகார்கள் பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வேட்பாளர்கள் புகார் அளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகார் மையத்தில் நேற்று வரை 194 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகார்களின் உண்மை தன்மை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story