நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மு.க.ஸ்டாலின் நாளை முதல் காணொலி மூலம் பிரசாரம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மு.க.ஸ்டாலின் நாளை முதல் காணொலி மூலம் பிரசாரம்
x
தினத்தந்தி 5 Feb 2022 4:33 AM IST (Updated: 5 Feb 2022 4:33 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மு.க.ஸ்டாலின் நாளை முதல் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காணொலி மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

நாளை தொடங்குகிறார்

இதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற தலைப்பில் காணொலி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, 6-ந்தேதி (நாளை) கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து 7-ந்தேதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்தும், 8-ந்தேதி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பின்னர், 9-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும், 10-ந்தேதி ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும், 11-ந் தேதி கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் காணொலி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து 12-ந்தேதி திருப்பூர் மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 13-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 14-ந்தேதி மதுரை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 15-ந்தேதி தஞ்சை மாவட்ட வேட்பாளர் களுக்கு ஆதரவாகவும், 17-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் காணொலி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story