அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை கவர்னர் செய்யவில்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை கவர்னர் செய்யவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. ‘நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது இதில் 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நீட் விலக்கு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரிடம் நேரில் சென்று வலியுறுத்தினோம். ஒவ்வொரு மாநிலமும் பிளஸ் டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என ஏற்கனவே மத்திய உயர்கல்வித்துறை கூறியுள்ளது.
நுழைவுத்தேர்வை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஏற்கனவே ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருந்தார். நீதிமன்றமும் உறுதி செய்தது என்றார்.
மேலும்,நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம்.இதனால்,நீட் விலக்கு மசோதா முன்னதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.இந்த நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஆனால்,அரசியலமைப்பு விதிப்படி தமிழக கவர்னர் தனது கடமையை செய்யவில்லை.எனவே,சமூகநீதி போராட்டத்தை முன்னெடுக்கவே அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது",என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story