‘கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்’ என்ற அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கால் முறிவு
கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்’.. என்று சர்ச்சையாக பேசிய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
சென்னை
விருதுநகரில் கட்சிக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாடியில் இருந்து குதித்து, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28-ந் தேதி சாத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் ena பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் விளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடிக்க போலீசார் சென்ற போது, அவர் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்த நிலையில், கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது.
Related Tags :
Next Story