நீட் விவகாரம் - சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை,
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி,பாமக,விசிக,மதிமுக, உள்ளிட்ட 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில்,
* நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய கவர்னருக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
* நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
* வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்த்தப்பட்டது.
* நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக வலியுறுத்தியது.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மேற்கோள்காட்டி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டார் கவர்னர்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். 2006-ல் நுழைவுத்தேர்வு தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டு,
பிளஸ்டு 2 பொதுத்தேர்வு வெளிப்படையானது என அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியது.
* பிளஸ் டூ மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்த்து வந்தோம்.
* நுழைவுத்தேர்வை ஒழிக்கும் சட்டத்துக்கு 2007-ம் ஆண்டு 87 நாட்களுக்குள் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
* நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டம் அரசியலமைப்பு சட்டப்படி செல்லும் என்று 2007-ல் மத்திய அரசு தெரிவித்தது.
* கவர்னரை நேரில் சந்தித்து மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினேன். 142 நாட்கள் கிடப்பில் போட்டு திருப்பி அனுப்பி உள்ளார் கவர்னர்.
* மருத்துவ சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தீர்வு
* நீட் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை கவர்னர் தவறு என குறிப்பிட்டது சரியல்ல.
* நீட் விலக்கு தேவையற்றது என்ற கவர்னரின் கருத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
* நீட் விலக்கு சட்டமுன்வடிவை மீண்டும் இயற்றி ஜனாதிபதிக்கு ஒப்புதலை பெற கவர்னருக்கு அனுப்பி வைக்க முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story