முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா மீது அவரது கணவர் போலீசில் புகார்
முன்னாள் மேயரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சசிகலா புஷ்பா மீது அவரது இரண்டாவது கணவர் ராமசாமி புகார் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் மேற்கு, ஜீவன் பீமாநகரை சேர்ந்தவர் ராமசாமி (46). இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். ராமசாமியின் 2வது மனைவி சசிகலா புஷ்பா (45) அதிமுக சார்பில் ஏற்கனவே தூத்துக்குடி மேயர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் பதிவு வகித்தவர். தற்போது பா.ஜ.க-வில் உள்ளார்.
இந்நிலையில் ராமசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து அதிகாலையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது யாரோ ஒரு பெண் கதவை திறந்துள்ளார். சசிகலா புஷ்பா வீட்டில் படுக்கையறையில் படுத்திருந்த நிலையில் மற்றொரு அறையில் குடிபோதையில் வேறொருவர் இருந்ததும் தெரியவந்தது.
குடிபோதையில் இருந்த நபரிடம் இதுகுறித்து கேட்டபோது, தன்னை தாக்க வந்ததாக கூறி ராமசாமி ஜெ.ஜெ நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் சசிகலா புஷ்பா, வீட்டில் இருந்ததாக கூறப்படும் விழுப்புரத்தை சேர்ந்த அமுதா மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story