பிப்.8 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு


பிப்.8 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 6:55 PM IST (Updated: 5 Feb 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அப்பாவு தெரிவித்தார்.

சென்னை,

பிப்ரவரி 8- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.மேலும், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும்  எனவும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். 

பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு சட்டமன்றக் கூட்டம் ஏன்?

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி,பாமக,விசிக,மதிமுக, உள்ளிட்ட 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில்,

*  நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய கவர்னருக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

* நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு  சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

* வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்த்தப்பட்டது. 

* நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story