பணியிலிருந்த தேர்தல் அதிகாரி மாரடைப்பால் மரணம்


பணியிலிருந்த தேர்தல் அதிகாரி மாரடைப்பால் மரணம்
x
தினத்தந்தி 5 Feb 2022 7:14 PM IST (Updated: 5 Feb 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தேர்தல் அதிகாரி மரணமடைந்தார்.

சேலம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவர், மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில்  சேலம் கலெக்டர் அலுவலகத்திற்க்கு தேர்தல் பணிக்கு வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கு இருந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்சை உடனடியாக வரவழைத்து அவரை சிசிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தங்கராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் சக அதிகாரிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story