புதுக்கோட்டை அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை
புதுக்கோட்டை அருகே தடுப்பை அகற்றி செல்ல முயன்ற லாரி உரிமையாளரை கட்டையால் தாக்கியதில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜன் (45). இவர் டிப்பர் லாரி சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். அவர் நேற்று மாலை காரில் மாங்கானம்பாட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இடப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருந்ததால் சாலையின் குறுக்கே கம்புகள் மற்றும் கட்டைகளை வைத்து ஒரு தரப்பினர் தடுப்பு ஏற்படுத்தி வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் ரெங்கராஜன் அவ்வழியாக சென்ற நிலையில், காரை விட்டு இறங்கி தடுப்புகளை அகற்றி செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் கட்டையால் ரெங்கராஜனை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே லாரி உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story