நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார். இன்று காலை 11 மணியளவில் சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story