லதா மங்கேஷ்கர் மறைவு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர், சிகிச்சை பலனின்றி இன்று காலை தனது 92-ஆவது வயதில் காலமானார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,
இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் பல்வேறு மொழிகளில் தனது மெலிதான குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story