லாரி மோதியதில் பெண் பரிதாபமாக பலி


லாரி மோதியதில் பெண் பரிதாபமாக பலி
x
தினத்தந்தி 6 Feb 2022 6:11 PM IST (Updated: 6 Feb 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் மீது மணல் லாரி மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி காவேரி அம்மாள் (50).  அவர் இன்று காலை கடன்களை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து இந்திரா நகர் பிரதான சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே மணல் லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று அவர் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் காவேரி அம்மாள் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அன்னதானப்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Next Story