முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!
மூன்றாவது செமஸ்டர் நேரடி தேர்வாக தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி முறையிலான தேர்வுகள் தான் நடைபெறும் என்று பல்கலைக்கழக தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
முதல் 2 செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடந்ததால், மூன்றாவது செமஸ்டர் கல்லூரிகளில் நேரடியாக சென்று எழுதும் தேர்வாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது செமஸ்டரில் எழுத்து தேர்வு இல்லை என்பதால், மூன்றாவது செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த எம்.பி.ஏ பட்டப்படிப்பை தவிர்த்து, பிற முதுநிலை படிப்புகளுக்கான(முனைவர் படிப்பு உட்பட) நவம்பர்/டிசம்பர் 2021 செமஸ்டர் தேர்வுகள் எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story