அ.தி.மு.க வேட்பாளரை மீட்டுத்தரக் கோரி ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம்


அ.தி.மு.க வேட்பாளரை மீட்டுத்தரக் கோரி ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2022 12:01 PM IST (Updated: 7 Feb 2022 12:01 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க வேட்பாளரை மீட்டுத்தரக் கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அண்ணா சிலை முன்பு போராட்டம் நடந்து வருகிறது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் உள்ளது இதில் தி.மு.க., அ.தி.மு.க.,உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன 9வது வார்டில் தி.மு.க சார்பாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணியும், அ.தி.மு.க. சார்பாக இந்திராணி இருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 இந்த வேட்புமனு தாக்கலில் இன்று 7ந் தேதி திங்கள்கிழமை மதியம் 3 மணி வரை திரும்பப் பெற வேண்டும். இந்நிலையில் நேற்று முதல் அ.தி.மு.க வேட்பாளர் இந்திராணி மாயமானார்.

அவரை தி.மு.க.வினர் கடத்தி சென்றதாகவும் அவரை மீட்டுத்தரக் கோரியு அ.தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா சிலை முன்பு காத்திருக்கும் போராட்டம் நடந்து வருகிறது.  இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story