சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார்.
திருச்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து காரில் சமயபுரம் வந்த துர்கா ஸ்டாலின் முககவசம் அணிந்தபடி கோவிலின் பின்பக்க வழியாக சென்று மாரியம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, கொடிமரத்தை வணங்கிய அவர், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினை கோவில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story