பழனியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு


பழனியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 7 Feb 2022 12:20 PM IST (Updated: 7 Feb 2022 12:20 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்

திண்டுக்கல்

பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சந்தானகிருஷ்ணன் பணியாற்றி வருகின்றார் . இவர் நேற்று இரவு  தனது நண்பர் ஆனந்த் என்பவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சந்தானகிருஷ்ணனை அரிவாளால் வெட்ட முயன்றது.  அதிர்ச்சி அடைந்து தடுக்க முன்றபோது தலையில் வெட்டு விழுந்தது.

பின்னர் அங்கு இருந்த ஆனந்தை வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் வெட்டு காயமடைந்த இருவரும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றர்.  தகவலறிந்த திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து பழனி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story