ஈரோடு: சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பலி - 5 பேர் படுகாயம்


ஈரோடு: சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பலி - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Feb 2022 12:54 PM IST (Updated: 7 Feb 2022 12:54 PM IST)
t-max-icont-min-icon

விஜயமங்கலம் அருகே சாலையோ மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

ஈரோடு

திருப்பூர் சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மனைவி விஜயலட்சுமி  மற்றம் உறவினர்களுடன் பண்ரூட்டியில் நடைபெறும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே வந்தபோது டிரைவிர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் கார் மோதி விபத்துக்கு உள்ளனது. இந்த விபத்தில் முகத்தில் பலத்தி காயம் அடைந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் இருந்த சண்முகசந்தரம் மற்றும் உறவினர்கள் 4 பேரும் லேசான காங்களுடன் உயிரி தப்பினர். இவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இந்த விபத்து தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story