திருப்பூர் : சூட்கேஸில் பெண் சடலம்... சாக்கடையில் வீசி சென்றதால் பரபரப்பு


திருப்பூர் : சூட்கேஸில் பெண் சடலம்... சாக்கடையில் வீசி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Feb 2022 1:59 PM IST (Updated: 7 Feb 2022 2:01 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் ரத்தம் படிந்திருந்த  நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இதுகுறித்து  வீரபாண்டி போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சென்று பார்வையிட்டனர். சூட்கேசை திறந்து பார்த்த போது அதற்குள்  25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. இதனால் அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  

சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு மற்றும் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். 

இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story