பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட சதிராட்டக் கலைஞருக்கு முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை,
தேவதாசி மரபின் கடைசி பெண் என கருதப்படும் சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்தவர். 83 வயதிலும் தான் கற்ற சதிர் நடனத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்றளவும் சதிர் நடனம் ஆடி வருகிறார்.
இவருக்கு கடந்த ஜனவரி 25 அன்று மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7) முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Related Tags :
Next Story