தாயார் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பி வர கால தாமதமானதால் கணவர் தற்கொலை


தாயார் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பி வர கால தாமதமானதால் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2022 7:57 PM IST (Updated: 7 Feb 2022 7:57 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் மனைவி தாயார் வீட்டுக்கு சென்று திரும்பி வர கால தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்,

பட்டுக்கோட்டை லட்சத் தோப்பு, தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(35 ). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுகன்யா (30) சில நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் ஒரத்தநாட்டில் உள்ள அவருடைய தாயார் வீட்டிற்கு தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளனர். திரும்பி வருவதற்கு காலதாமதம் ஆனதால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் விரக்தி அடைந்து வீட்டிற்கு வந்த செந்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுகன்யா பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து செந்தில் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story