அப்பா பைத்தியசாமி கோவிலில் குருபூஜை விழா ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்


அப்பா பைத்தியசாமி கோவிலில் குருபூஜை விழா ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Feb 2022 7:58 PM IST (Updated: 7 Feb 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

அப்பா பைத்தியசாமியின் குருபூஜையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்.

புதுச்சேரி
அப்பா பைத்தியசாமியின் குருபூஜையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்.

குருபூஜை

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மிக குரு அப்பா பைத்தியசாமிகள் ஆவார். அவரது குருபூஜை விழா இன்று நடந்தது. இதையொட்டி கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமிகள் கோவிலில் காலையில் திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடந்தது.
காலை 10 மணிக்கு அப்பா பைத்தியசாமிக்கு திருமஞ்சனம் மற்றும் திருக்குட நன்னீராட்டு நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அன்னதானம்

மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குருபூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்.
இதேபோல் சேலம் அப்பா பைத்தியசாமி சாமி கோவிலில் நடந்த குருபூஜையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

Next Story