ஈரோடு, கரூர் மாநகராட்சியில் தி.மு.க. பெண் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
ஈரோடு, கரூர் மாநகராட்சிகளில் தி.மு.க. பெண் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானானர். நெகமம் பேரூராட்சியில் தி.மு.க.வினர் 8 பேர் போட்டியின்றி தேர்வானார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சியில் 51-வது வார்டுக்கு தி.மு.க. சார்பில் விஜயலட்சுமி, அ.தி.மு.க. சார்பில் காஞ்சனா, மாற்று வேட்பாளராக கலா உள்ளிட்ட 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் காஞ்சனா, கலா மற்றும் சுயேச்சை வேட்பாளர் சங்கீதா ஆகிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி, சுயேச்சை வேட்பாளர் திவ்யபாரதி ஆகியோர் நேற்று தங்களது வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றுக்கொண்டனர். இதனால் தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கரூர் மாநகராட்சி 22-வது வார்டில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் பிரேமா நிறுத்தப்பட்டிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நகராட்சிகளில்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன், திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 10-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் மெடிக்கல் ரவி,
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 6-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பத்மாவதி போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
நாகை நகராட்சி 16-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அரசியல் கட்சிகள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் சுயேச்சை வேட்பாளர் சுரேஷ் போட்டியின்றி தேர்வானார்.
9 ேபர் போட்டியின்றி தேர்வு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.வை சேர்ந்த 8 வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேச்சை என 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுபாஷினி பிரியா 13-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர் பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் ராயல் எஸ்.அன்பு, விக்கிரவாண்டி பேரூராட்சி 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஆனந்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி, சங்கராபுரம் பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வை சோ்ந்த சையது இம்தியாஸ், 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளா் சாபிருன்னிஷா, 12-வது வார்டு தி.மு.க. சுதா, 13-வது வார்டு தி.மு.க. ரோஜாமணி, கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 15-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் தமயந்தி செங்கல்வராயன், கிள்ளை பேரூராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அறிவழகன், 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மல்லிகா, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் 18-வது வார்டு தி.மு.க. ராமலிங்கம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் குலோத்துங்கன், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி 14-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் செல்வி ஆனந்தன், பெண்ணாடம் பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தி.மு.க. சண்முகபிரியா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சியில் 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மணிமேகலை கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நீலகிரி பிக்கட்டி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் நித்யா (வார்டு எண்10), மனோகரன் (வார்டு எண் 12) ஆகியோரும், கேத்தி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் நித்தியாவும் (வார்டு எண்7) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியின் 5-வது வார்டில் சுயேச்சையாக களமிறங்கிய இலுப்பூர் நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் செந்தில்ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியின்றி தேர்வான பா.ஜனதா வேட்பாளர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 10 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள். 14-வது வார்டில் பா.ஜனதா கட்சி வேட்பாளர் சத்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story