தி.மு.க.வை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது எடப்பாடி பழனிசாமி பேச்சு
பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க சொன்னவர்கள் தற்போது ரூ.100 கூட கொடுக்கவில்லை. தி.மு.க.வை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சிவகாசி கம்மவர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்று 8 மாதம் ஆகிறது. இந்த 8 மாதங்களில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். இதுவரை எந்த திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற திட்டங்களை மு.க.ஸ்டாலின் இப்போது தொடங்கி வைத்து வருகிறார்.
மக்களை ஏமாற்றி
கடந்த தேர்தலில் கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்று தி.மு.க. தற்போது ஆட்சியில் உள்ளது. அ.தி.மு.க. அரசு இந்த நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது. ஆனால் தி.மு.க. அரசு கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை எவ்வித சிரமும் இன்றி சிறப்பாக கொண்டாட வழி செய்து பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் கொடுத்தவர் ஜெயலலிதா. அதேபோல் என்னுடைய ஆட்சி காலத்திலும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.2,500 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் அவர் தற்போது முதல்-அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் ரூ.100 கூட தரவில்லை. இந்த ஆண்டு தி.மு.க. அரசு கொடுத்த பொங்கல் தொகுப்பில் தரம் இல்லாத பொருட்கள் வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டினார்கள். இதுகுறித்த பேட்டி அளித்தவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் இன்னும் நீட் தேர்வு ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் அது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி விட்டனர்.
ஏமாற்றம்
தமிழகத்தில் 48 லட்சம் பேர் 5 பவுன் நகைகளை கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்து பணம் பெற்றனர். அரசு நகை கடன் ரத்து செய்யும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் தி.மு.க. அரசு 13 லட்சம் பேருக்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகளின் கீழ் நகை கடன்களை தள்ளுபடி செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தி.மு.க.வை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல நெல்லையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி “பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்” என்று கூறினார்.

Related Tags :
Next Story