நீட் விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Feb 2022 10:18 AM IST (Updated: 8 Feb 2022 10:27 AM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

சென்னை,

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். 

மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story