“வெளியே போவதற்கு இவ்வளவு பில்டப் வேண்டாம்..” நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் அப்பாவு பதில்!
நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிருந்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது.
சென்னை,
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இருந்து பா.ஜ.க வெளிநடப்பு செய்துள்ளது. பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு பேசினார். "ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் கவர்னர் கருத்து தெரிவிக்கவில்லை" என அவர் கூறினார்.
தொடர்ந்து குறுக்கிட்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை நோக்கி சபாநாயகர் அப்பாவு, “வெளியே போறதுக்கு இவ்ளோ பில்டப் வேண்டாம்; போக நினைத்தால் போய்விடுங்கள்” என்று வெளிப்படையாக கூறினார்.
இதனையடுத்து பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story