நாட்டின் நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சென்னை ஐ.ஐ.டி.யில் பல்துறை நீர் மேலாண்மை மையம்


நாட்டின் நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சென்னை ஐ.ஐ.டி.யில் பல்துறை நீர் மேலாண்மை மையம்
x
தினத்தந்தி 8 Feb 2022 11:49 AM IST (Updated: 8 Feb 2022 11:49 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் உள்ள நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சென்னை ஐ.ஐ.டி.யில் 'அக்வாமேப்' என அழைக்கப்படும் பல்துறை நீர் மேலாண்மை மையம் தொடங்குவதற்க்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி.

சென்னை,

இந்தியாவில் உள்ள நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண 'அக்வாமேப்' என்று அழைக்கப்படும் பல்துறை நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தை சென்னை ஐ.ஐ.டி. புதிதாக நிறுவி இருக்கிறது. இந்த மையம் புதுமையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அதிக பயன் அளிக்கும் மாதிரிகளை வடிவமைப்பதன் மூலம் சவாலான நீர் பிரச்சினைகளுக்கு தெளிவான தீர்வுகளை வழங்கும். மேலும், இந்த மையம் நடைமுறையில் உள்ள சிக்கலான நீர்ப் பிரச்சினைகளுக்கு கூட்டமைப்பு அணுகு முறையில் தீர்வு காணும். 

உள்நாட்டில் நீர் மேலாண்மை மற்றும் கொள்கையை அமல்படுத்தும் மாதிரி திட்டங்களாக, குறைந்தபட்சம் 6 கிராமங்கள், நகரங்களில் சோதனை அடிப்படையில் புதுமை நீர்த்திட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக முடிக்கும். சென்னை ஐ.ஐ.டி.யின் திட்டப்பிரிவு தலைவரும், கட்டிட பொறியியல் துறையின் பேராசிரியருமான லிஜி பிலிப், இந்த பல்துறை நீர் மேலாண்மை மையத்தின் திட்டத்துக்கு தலைமை ஆய்வாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.

புதிதாக நிறுவப்பட்டு இருக்கும் இந்த மையத்துக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்களான பரசுராம் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன் நாராயணன் ஆகியோர் தொடக்க நிலை நிதி உதவியாக ரூ.3 கோடியை 2 ஆண்டுகளுக்கு வழங்க உறுதி அளித்து இருப்பதுடன், 5 ஆண்டு திட்டத்தை வடிவமைப்பதிலும் உதவி புரிந்துள்ளனர்.


Next Story