தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 8 Feb 2022 7:56 PM IST (Updated: 8 Feb 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,516- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசின் 3-வது அலை உச்சம் பெற்று கடந்த சில வாரங்களாகவே மளமளவென சரியத்தொடங்கியுள்ளது.  நேற்று ஒருநாள் பாதிப்பு 5,104- ஆக பதிவான நிலையில் இன்று ஒருநாள் பாதிப்பு 4,516- ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;- 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,516- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  34 லட்சத்து 20 ஆயிரத்து 505- ஆக  உயரந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 20,237- பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 898- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 792- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 


Next Story