உள்ளாட்சி தேர்தல்; வாக்காளர்களே ஓட்டு சாவடி மையம் பற்றி அறிந்து கொள்ள வசதி


உள்ளாட்சி தேர்தல்; வாக்காளர்களே ஓட்டு சாவடி மையம் பற்றி அறிந்து கொள்ள வசதி
x
தினத்தந்தி 9 Feb 2022 2:50 AM IST (Updated: 9 Feb 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி தேர்தலில் தங்களின் ஓட்டு சாவடிகளை இணையதளம் வழியே வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சென்னை,



சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னை மாநகராட்சி தேர்தலில், ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்காக மொத்தம் 5,594 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

இந்த ஓட்டுச்சாவடிகளை மாநகராட்சியின், https://election.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், 'Know your Zone and Division' என்ற இணைப்பில், மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் அமைவிடங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 'Know your Polling Station' என்ற இணைப்பை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், ஓட்டுச்சாவடி விபரம், வாக்காளர் பட்டியலின் பாகம் எண் மற்றும் வரிசை எண் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story