ராகுல் பேச்சுக்கு பின் தமிழக பா.ஜ.க.விற்கு சுக்கிரதிசை அடித்துள்ளது; அண்ணாமலை
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பின் தமிழக பா.ஜ.க.விற்கு சுக்கிரதிசை அடித்துள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ள நோயாளி என்று விமர்சித்ததுடன், தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனில் தமிழகத்தில் காங்கிரஸ் இயங்குகிறது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று ராகுல் காந்தி விமர்சித்தது குறித்து பேசிய அண்ணாமலை, ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு இனிப்பு வழங்க திட்டமிட்டேன். ராகுல் காந்தி மோடியை பற்றி பேசிய போதெல்லாம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றனர்.
ராகுல் காந்தி தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது என சொன்னதில் இருந்து தமிழக பா.ஜ.க.விற்கு சுக்கிரதிசை அடித்துள்ளது. பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி பல உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வாகியுள்ளனர் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story