10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்
10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு இன்று தொடங்க உள்ளது. நாளை நடக்க இருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
2021-22-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த கல்வித் துறை திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஆங்கில பாடத்தேர்வு நடைபெற இருந்தது. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நடைபெற உள்ள 10, 12-ம் வகுப்புக்கான ஆங்கில பாடத் திருப்புதல் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, 17-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story