திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், திருவல்லிகேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (புதன் கிழமை) திருச்சி மாவட்டம் வருகிறார்.
மதியம் 1 மணியளவில் பெட்டவாய்தலையில் தி.மு.க சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாலை 4 மணியளவில் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு அருகிலும், மாலை 5 மணியளவில் உறையூர் குறத்தெரு அருகிலும், மாலை 5.30 மணியளவில் மரக்கடை பகுதியிலும், மாலை 6.30 மணியளவில் காட்டூரிலும், இரவு 7 மணியளவில் துவாக்குடியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Related Tags :
Next Story