“நீட் விலக்கு மசோதாவை இந்தமுறை கவர்னர் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
நீட் விலக்கு மசோதாவை இந்தமுறை கவர்னர் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா, சட்ட சபையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உடனே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் விலக்கு மசோதாவை கவர்னர் இந்தமுறை திருப்பி அனுப்பாமல் நிச்சயம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.
மசோதாவை கவர்னர் அனுப்பிய பின் ஜனாதிபதியை தமிழக குழு சந்திக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஜனாதிபதியும் விரைந்து முடிவெடுப்பார். ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியான வாய்ப்புகள் முன்னெடுக்கப்படும். நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பில் 4% மட்டுமே தமிழகத்தில் மருத்துவமனையை நாடி வருகின்றனர். ஆக்சிஜன் தேவை 5 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story