நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு - ஐகோர்ட் மதுரைக்கிளை தள்ளுபடி


நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு - ஐகோர்ட் மதுரைக்கிளை தள்ளுபடி
x
தினத்தந்தி 9 Feb 2022 11:31 AM GMT (Updated: 9 Feb 2022 11:31 AM GMT)

நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மதுரை,

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து கடந்த நவம்பர் 1 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை தள்ளுபடி செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், கடன் தள்ளுபடி அரசுக்கு கூடுதல் சுமையாக அமையும் எனவும், கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறையில் ஏராளமான முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால் தமிழக அரசின் அரசானையை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதோடு, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story